Skip to main content

Posts

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்  இராமாயண கதை முழுதும்  'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு  அனந்தனே  அசுரர்களை   அழித்து,   அன்பர்களுக்கு  அருள  அயோத்தி  அரசனாக அவதரித்தான்.  அப்போது  அரிக்கு  அரணாக  அரசனின்  அம்சமாக  அனுமனும்  அவதரித்ததாக  அறிகிறோம்.  அன்று  அஞ்சனை  அவனிக்கு  அளித்த  அன்பளிப்பு  அல்லவா  அனுமன்? அவனே  அறிவழகன்,  அன்பழகன்,  அன்பர்களை  அரவணைத்து  அருளும்  அருட்செல்வன்! அயோத்தி  அடலேறு,  அம்மிதிலை  அரசவையில்  அரசனின்  அரியவில்லை  அடக்கி,  அன்பும்  அடக்கமும்  அங்கங்களாக  அமைந்த  அழகியை  அடைந்தான் .  அரியணையில்  அமரும்  அருகதை  அண்ணனாகிய  அனந்தராமனுக்கே!  அப்படியிருக்க  அந்தோ ! அக்கைகேயி  அசூயையால்  அயோத்தி  அரசனுக்கும்  அடங்காமல்  அநியாயமாக  அவனை...
Recent posts

Money doesn’t make us Rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர். வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், ” அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? ” . மகன் சொன்னான், ” நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்… அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க… ” . . தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான், “ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு…” ”Money doesn’t make us rich” இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும்.

Kumar and his Dog

குமாருக்கு நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. காரணம் அது அவன் மனைவி வளர்க்கும் நாய். ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!  கடுப்பான குமார், மறுநாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம் வீட்டில் நாய்!  மூன்றாம் நாள் காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.  இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள். அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

Hope is important than other things

நான்கு  மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு  இருந்தன. மெலிதாய்  காற்று வீசிக்கொண்டு  இருந்தது..!!  காற்றை கண்டதும்...  'அமைதி‘ என்ற முதல்  மெழுகுவர்த்தி ‘  ஐயோ காற்று வீசுகின்றது, நான்  அணைந்து  விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.  காற்று பட்டதும்  அணைந்துவிட்டது.  ‘அன்பு ‘ என்ற அடுத்த  மெழுகுவர்த்தியும்  காற்றை எதிர்க்க முடியாது’ என்று  அணைந்துவிட்டது.  'அறிவு‘ என்ற மூன்றாவது  மெழுகுவர்த்தியும்  காற்றை எதிர்க்க முடியாமல்  அணைந்தது.  நான்காவது  மெழுகுவர்த்தி மட்டும்  காற்று  வீசிய சிலநொடிகள் போராடி  ஜெயித்துவிட்டது.  அப்போது அந்த அறையில் ஒரு  சிறுவன் நுழைந்தான்.  ‘அடடா மூன்று  மெழுகுவர்த்திகளும்  அணைந்துவிட்டதே'  என்று கவலையுடன் சொன்னான்.  அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது  மெழுகுவர்த்தி  சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.  என்னை வைத்து மற்ற  மூன்றையும் பற்ற வைத்துகொள்’  என்றது.  சிறுவன் உடனே....

Love of Mother, and Hatred of son

My mom only had one eye. I hated her… she was such an embarrassment. My mom ran a small shop at a flea market. She collected little weeds and such to sell… anything for the money we needed she was such an embarrassment. There was this one day during elementary school. I remember that it was field day, and my mom came. I was so embarrassed. How could she do this to me? I threw her a hateful look and ran out. The next day at school… “Your mom only has one eye?!” and they taunted me. I wished that my mom would just disappear from this world so I said to my mom, “Mom, why don’t you have the other eye?! You’re only going to make me a laughingstock. Why don’t you just die?” My mom did not respond. I guess I felt a little bad, but at the same time, it felt good to think that I had said what I’d wanted to say all this time. Maybe it was because my mom hadn’t punished me, but I didn’t think that I had hurt her feelings very badly. That night… I woke up, and went to the kitchen to get a ...

Respect The Girls

When a Girl Accepts  Your Friend Request it  means she accepted  Your "Friendship" Not  Your "Proposal"  When a Girl sends  you a Friend Request  it means She wants  to be your Friend not  Your Girl friend..  When She Tag you it  means she wants to  share her Thoughts  with You not that  She's Lost in Your  Thoughts..  When she comments  on Your statusit means  She's just being Social  not Flirting..  When She Like Your  comment it means She  like Your Comment  not You..  so Respect The Girls

Lifestyle change in last 30 years...

ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsup என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.  இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க.  அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.  அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.  சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.  இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.  உப்பையும் சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால  பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. அதையும் நம்பி யூஸ் பன்னுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி. கேட்டா உங்க பே...