Skip to main content

Lifestyle change in last 30 years...

ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsup என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன. 
இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க. 
அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க. 
அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க. 

சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம். 
இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க. 

உப்பையும் சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால  பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. அதையும் நம்பி யூஸ் பன்னுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி. கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கானு கேக்குறான்.  டேய் பல் கூச்சம் வர வக்கிரதும் நீங்க தான். அதுக்கும் பேஸ்ட் விக்கிறதும் நீங்கத்தானா? 

அதைவிட கொடுமை ஒண்ணு இருக்கு. நாட்டு சக்கரையை விட சீனி தான் சுத்தமானது சுவையானதுனு சொல்லிட்டு இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கல்ஸ்யும் இருக்கு. 
என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா "ஆபத்து R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு ஹேமமாலினி சொன்னாங்க. 


சரி நல்ல நல்ல புடவை கட்டிக்கிட்டு வந்து சொல்ராங்கலேன்னு ஒரு மெஷினே வாங்கி மாட்டினோம்.உடனே அதல சத்து இல்ல ,எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது. 
மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப்."மாடில தோட்டம் போடு,உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு, 
நாட்டு கோழி வளர்த்தா முட்டையும் சிக்கனும் கிடைக்கும்,தண்ணிய கொதிக்க வச்ச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராது" ன்னுச்சு 
அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம், பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வைச்சுட்டு இப்ப திருப்பி அதையே சொல்றீங்களேடா? 
முன்ன மாதிரி பேப்பர் மட்டும் படிச்சுட்டு இந்த facebook ,வாட்ஸுப் எல்லாம் மூட்ட கட்டிட்டு பழைய கருப்பு கலர் போன் ஒண்ணா வாங்கி வச்சு நிம்மதியா தூங்குங்க. 


என்ன நான் சொல்றது சரிதானே? உண்மையான வாசகம் 

படித்ததில் ரசித்தது.

Comments

Popular posts from this blog

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்  இராமாயண கதை முழுதும்  'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு  அனந்தனே  அசுரர்களை   அழித்து,   அன்பர்களுக்கு  அருள  அயோத்தி  அரசனாக அவதரித்தான்.  அப்போது  அரிக்கு  அரணாக  அரசனின்  அம்சமாக  அனுமனும்  அவதரித்ததாக  அறிகிறோம்.  அன்று  அஞ்சனை  அவனிக்கு  அளித்த  அன்பளிப்பு  அல்லவா  அனுமன்? அவனே  அறிவழகன்,  அன்பழகன்,  அன்பர்களை  அரவணைத்து  அருளும்  அருட்செல்வன்! அயோத்தி  அடலேறு,  அம்மிதிலை  அரசவையில்  அரசனின்  அரியவில்லை  அடக்கி,  அன்பும்  அடக்கமும்  அங்கங்களாக  அமைந்த  அழகியை  அடைந்தான் .  அரியணையில்  அமரும்  அருகதை  அண்ணனாகிய  அனந்தராமனுக்கே!  அப்படியிருக்க  அந்தோ ! அக்கைகேயி  அசூயையால்  அயோத்தி  அரசனுக்கும்  அடங்காமல்  அநியாயமாக  அவனை...

Money doesn’t make us Rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர். வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், ” அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? ” . மகன் சொன்னான், ” நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்… அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க… ” . . தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான், “ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு…” ”Money doesn’t make us rich” இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும்.

Height of Hope

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.  வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.  மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.  அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.  மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் ...