Skip to main content

Wife's Last wish!

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்… 
நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?” அதை கேட்ட கணவன் கண் கலங்கியப்படி அழுது கொண்டே சொல்கிறான்… “உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!” என்று… மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்… மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் கழி மண்ணால் அழகிய கல்லறை கட்டி வீடு திரும்புகிறான்… 

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை! 
என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது. 

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான், 
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான். 
அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் #சகோதரன் வருகிறான்… “நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!” 
என்று கேட்கையில் … 

“என் சகோதரி அதாவது உங்கள் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு 
என்னிடம் தம்பி !! 
என் கணவர் மறுமணம் பண்ணும் வரை 
தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு” என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!” 
என கூறி சத்தமாக கதறி அழுதான்....

Comments

Popular posts from this blog

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்  இராமாயண கதை முழுதும்  'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு  அனந்தனே  அசுரர்களை   அழித்து,   அன்பர்களுக்கு  அருள  அயோத்தி  அரசனாக அவதரித்தான்.  அப்போது  அரிக்கு  அரணாக  அரசனின்  அம்சமாக  அனுமனும்  அவதரித்ததாக  அறிகிறோம்.  அன்று  அஞ்சனை  அவனிக்கு  அளித்த  அன்பளிப்பு  அல்லவா  அனுமன்? அவனே  அறிவழகன்,  அன்பழகன்,  அன்பர்களை  அரவணைத்து  அருளும்  அருட்செல்வன்! அயோத்தி  அடலேறு,  அம்மிதிலை  அரசவையில்  அரசனின்  அரியவில்லை  அடக்கி,  அன்பும்  அடக்கமும்  அங்கங்களாக  அமைந்த  அழகியை  அடைந்தான் .  அரியணையில்  அமரும்  அருகதை  அண்ணனாகிய  அனந்தராமனுக்கே!  அப்படியிருக்க  அந்தோ ! அக்கைகேயி  அசூயையால்  அயோத்தி  அரசனுக்கும்  அடங்காமல்  அநியாயமாக  அவனை...

Money doesn’t make us Rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர். வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், ” அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? ” . மகன் சொன்னான், ” நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்… அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க… ” . . தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான், “ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு…” ”Money doesn’t make us rich” இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும்.

Height of Hope

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.  வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.  மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.  அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.  மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் ...