Skip to main content

What you give, You will get back...

சீனாவில், லீ  என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு 
லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. எதற்கெடுத்தாலும்வாக்குவாதம், சண்டை சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே 
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது. 
 
லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி 
எறும்பு போல திண்டாடினான். 
ஒரு நாள் லீ அவள் தகப்பனாரின் 
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர் 
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். 
அவரிடம்  லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி 
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப் 
பொடி ஒன்றைக் கொடுத்து, இது மெல்லக் கொல்லும் நஞ்சு, இதைத் தினம்  

உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக 
கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் என்று கூறினார். மேலும்,  மிகவும் கவனமாக செயல் படவேண்டும். முக்கியமாக உன்மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்துகொள் , 
அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒருசில மாதங்கள் தானே  என்று கூறி அனுப்பி 
வைத்தார். அதன்படி அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள். 

மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும் 
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். 
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. 
மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில் 
திக்குமுக்காடிய  லீ மருத்துவரிடம் ஓடினாள் . 
ஐயா, இந்த மருந்துக்கு மாற்று மருந்து கொடுங்கள்  என கெஞ்ச,ஏன் இப்படி ?என அவர் கேட்க,என் மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை என அழுதாள். அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது வெறும் சத்துப்பொடி தான். 

அப்போது நஞ்சு உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய் 
நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது. 
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார். 
நமது படிப்போ , பதவியோ , செல்வமோ , சொத்துக்களோ நமக்கு கடைசி வரை உதவாது ...... 
அன்பு காட்டுவோம் , அனைவரையும் நேசிப்போம் ....

Comments

Popular posts from this blog

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்  இராமாயண கதை முழுதும்  'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு  அனந்தனே  அசுரர்களை   அழித்து,   அன்பர்களுக்கு  அருள  அயோத்தி  அரசனாக அவதரித்தான்.  அப்போது  அரிக்கு  அரணாக  அரசனின்  அம்சமாக  அனுமனும்  அவதரித்ததாக  அறிகிறோம்.  அன்று  அஞ்சனை  அவனிக்கு  அளித்த  அன்பளிப்பு  அல்லவா  அனுமன்? அவனே  அறிவழகன்,  அன்பழகன்,  அன்பர்களை  அரவணைத்து  அருளும்  அருட்செல்வன்! அயோத்தி  அடலேறு,  அம்மிதிலை  அரசவையில்  அரசனின்  அரியவில்லை  அடக்கி,  அன்பும்  அடக்கமும்  அங்கங்களாக  அமைந்த  அழகியை  அடைந்தான் .  அரியணையில்  அமரும்  அருகதை  அண்ணனாகிய  அனந்தராமனுக்கே!  அப்படியிருக்க  அந்தோ ! அக்கைகேயி  அசூயையால்  அயோத்தி  அரசனுக்கும்  அடங்காமல்  அநியாயமாக  அவனை...

Money doesn’t make us Rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர். வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், ” அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? ” . மகன் சொன்னான், ” நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்… அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க… ” . . தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான், “ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு…” ”Money doesn’t make us rich” இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும்.

Height of Hope

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.  வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.  மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.  அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.  மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் ...