Skip to main content

Posts

Showing posts from 2017

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்  இராமாயண கதை முழுதும்  'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு  அனந்தனே  அசுரர்களை   அழித்து,   அன்பர்களுக்கு  அருள  அயோத்தி  அரசனாக அவதரித்தான்.  அப்போது  அரிக்கு  அரணாக  அரசனின்  அம்சமாக  அனுமனும்  அவதரித்ததாக  அறிகிறோம்.  அன்று  அஞ்சனை  அவனிக்கு  அளித்த  அன்பளிப்பு  அல்லவா  அனுமன்? அவனே  அறிவழகன்,  அன்பழகன்,  அன்பர்களை  அரவணைத்து  அருளும்  அருட்செல்வன்! அயோத்தி  அடலேறு,  அம்மிதிலை  அரசவையில்  அரசனின்  அரியவில்லை  அடக்கி,  அன்பும்  அடக்கமும்  அங்கங்களாக  அமைந்த  அழகியை  அடைந்தான் .  அரியணையில்  அமரும்  அருகதை  அண்ணனாகிய  அனந்தராமனுக்கே!  அப்படியிருக்க  அந்தோ ! அக்கைகேயி  அசூயையால்  அயோத்தி  அரசனுக்கும்  அடங்காமல்  அநியாயமாக  அவனை...

Money doesn’t make us Rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர். வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், ” அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? ” . மகன் சொன்னான், ” நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்… அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க… ” . . தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான், “ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு…” ”Money doesn’t make us rich” இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும்.

Kumar and his Dog

குமாருக்கு நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. காரணம் அது அவன் மனைவி வளர்க்கும் நாய். ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!  கடுப்பான குமார், மறுநாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம் வீட்டில் நாய்!  மூன்றாம் நாள் காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.  இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள். அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

Hope is important than other things

நான்கு  மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு  இருந்தன. மெலிதாய்  காற்று வீசிக்கொண்டு  இருந்தது..!!  காற்றை கண்டதும்...  'அமைதி‘ என்ற முதல்  மெழுகுவர்த்தி ‘  ஐயோ காற்று வீசுகின்றது, நான்  அணைந்து  விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.  காற்று பட்டதும்  அணைந்துவிட்டது.  ‘அன்பு ‘ என்ற அடுத்த  மெழுகுவர்த்தியும்  காற்றை எதிர்க்க முடியாது’ என்று  அணைந்துவிட்டது.  'அறிவு‘ என்ற மூன்றாவது  மெழுகுவர்த்தியும்  காற்றை எதிர்க்க முடியாமல்  அணைந்தது.  நான்காவது  மெழுகுவர்த்தி மட்டும்  காற்று  வீசிய சிலநொடிகள் போராடி  ஜெயித்துவிட்டது.  அப்போது அந்த அறையில் ஒரு  சிறுவன் நுழைந்தான்.  ‘அடடா மூன்று  மெழுகுவர்த்திகளும்  அணைந்துவிட்டதே'  என்று கவலையுடன் சொன்னான்.  அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது  மெழுகுவர்த்தி  சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.  என்னை வைத்து மற்ற  மூன்றையும் பற்ற வைத்துகொள்’  என்றது.  சிறுவன் உடனே....

Love of Mother, and Hatred of son

My mom only had one eye. I hated her… she was such an embarrassment. My mom ran a small shop at a flea market. She collected little weeds and such to sell… anything for the money we needed she was such an embarrassment. There was this one day during elementary school. I remember that it was field day, and my mom came. I was so embarrassed. How could she do this to me? I threw her a hateful look and ran out. The next day at school… “Your mom only has one eye?!” and they taunted me. I wished that my mom would just disappear from this world so I said to my mom, “Mom, why don’t you have the other eye?! You’re only going to make me a laughingstock. Why don’t you just die?” My mom did not respond. I guess I felt a little bad, but at the same time, it felt good to think that I had said what I’d wanted to say all this time. Maybe it was because my mom hadn’t punished me, but I didn’t think that I had hurt her feelings very badly. That night… I woke up, and went to the kitchen to get a ...

Respect The Girls

When a Girl Accepts  Your Friend Request it  means she accepted  Your "Friendship" Not  Your "Proposal"  When a Girl sends  you a Friend Request  it means She wants  to be your Friend not  Your Girl friend..  When She Tag you it  means she wants to  share her Thoughts  with You not that  She's Lost in Your  Thoughts..  When she comments  on Your statusit means  She's just being Social  not Flirting..  When She Like Your  comment it means She  like Your Comment  not You..  so Respect The Girls

Lifestyle change in last 30 years...

ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsup என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.  இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க.  அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.  அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.  சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.  இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.  உப்பையும் சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால  பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. அதையும் நம்பி யூஸ் பன்னுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி. கேட்டா உங்க பே...

Parents are not important thing... They are everything....

Once upon a time, there lived a big mango tree. A little boy loved to come and play around it everyday. He climbed to the tree top, ate the mangoes, took a nap under the shadow… He loved the tree and the tree loved to play with him. Time went by, The little boy grew, and he no longer played around the tree. One day, the boy came back to the tree with a sad look on his face. “Come and play with me,” the tree asked the boy. “I am no longer a kid, I don’t play around trees anymore.” The boy replied, “I want toys. I need money to buy them.” “Sorry, I don’t have money… but you can pick all my mangoes and sell them so you will have money.” The boy was so excited. He picked all the mangoes on the tree and left happily. The boy didn’t come back. The tree was sad. One day, the boy grown into a man returned. The tree was so excited. “Come and play with me,” the tree said. “I don’t have time to play. I have to work for my family. We need a house for shelter. Can you help me?” “Sorry, I don’...

Wife's Last wish!

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்…  நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?” அதை கேட்ட கணவன் கண் கலங்கியப்படி அழுது கொண்டே சொல்கிறான்… “உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!” என்று… மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்… மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் கழி மண்ணால் அழகிய கல்லறை கட்டி வீடு திரும்புகிறான்…  தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!  என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.  ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,  ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏத...

What you give, You will get back...

சீனாவில், லீ  என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு  லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. எதற்கெடுத்தாலும்வாக்குவாதம், சண்டை சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே  வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.    லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி  எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் லீ அவள் தகப்பனாரின்  நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்  பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.  அவரிடம்  லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி  கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்  பொடி ஒன்றைக் கொடுத்து, இது மெல்லக் கொல்லும் நஞ்சு, இதைத் தினம்    உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக  கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் என்று கூறினார். மேலும்,  மிகவும் கவனமாக செயல் படவேண்டும். முக்கியமாக உன்மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்துகொள் ,  அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தே...

isn't it true?

When a Guy does Something Wrong...   Girl : You broke my Favorite Lamp !!!  Boy : It was an Accident... I didn't mean to..!!  Girl : I can't believe you did this.  Boy : I'm Sorry.. !! :/ :/ :/  When a Girl does Something Wrong...   Boy : You Lost My Dog??!!!  Girl : It was an Accident... I didn't mean to..!!  Boy : I can't believe you did this.  Girl : I already feel bad about it..!! Stop making me feel Worse..!!  Boy : I'm Sorry.. !! :/ :/ :/

Height of Hope

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.  வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.  மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.  அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.  மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் ...

Wiseman's instant mindfulness act

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.  முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? "  " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.  அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? ஏதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.  இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.  உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.  முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.  அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ?  " என்றார்.  பையன் சிரித்துக்கொண்டே சொன்னான்.  " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"

Mother's Love

அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.  இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.  வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.  வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.  "ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.  கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.  இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும்  அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்ட...

Funny Divorce Case

கோர்ட்டில்  விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.  அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார், “அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”  “அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”  “ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”  “எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”  “கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”  “அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”  “வீட்டுக்காரரோட என்ன சண்டை?”  “வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”  இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.  “எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.  “ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்ட...

Faild in education; But successfull in Business

இனி நீ படிக்க லாயக்கே இல்லை! என்று உங்களை யாராவது சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌.  வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி  எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.  ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. “இப்பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை.  வகுப்புல பாடம் நடத்தும்போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சு கிட்டிருந்தியான்னு கோபாமாக திட்டினார்.  அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். “இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பிவிட்டார்.  அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான். “உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த் தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.  அமைதியான அந்த உலகம் அவனுக்குவித்தியாசமாக தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையா சிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்...

Man can find fault in everything

குயிலைப் பார்த்து மனிதன் சொன்னான், நீ மட்டும் கருப்பா இல்லனா ரொம்ப நல்லாருக்கும் என்று ...  கடலைப் பார்த்து கூறினான் உப்பு மட்டும் இல்லனா உன் மதிப்பே தனி என்று...  அடுத்து ரோஜாவைப் பார்த்து கூறினான் முட்கள் இல்லனா நீ இன்னும் சிறப்பு என்று!  இவை மூன்றும் சேர்ந்து மனிதனிடம் சொன்னது குறைகளை மட்டுமே பார்க்கும் குணம் மட்டும் இல்லனா நீ எங்கயோ போயிருப்ப என்று! !!  (குறைகள் மட்டும் பார்க்கும் குணம் இல்லா நாளாக நமக்கு எப்போதும் அமையட்டும்..! )

Funny Grandson

பேரன் : பாட்டி தூக்கம் வரல..  TV பாக்கட்டுமா?  பாட்டி : எங்கிட்ட பேசிட்டிருடா பேரான்டி..  பேரன் : பாட்டி.. நம்ம வீட்ல எப்போதுமே 6 பேர் தான் இருப்போமா..?  நீங்க ,  அம்மா ,  அப்பா ,  அக்கா ,  நான்    என் பூனைக்குட்டி   பாட்டி : அப்டி இல்லியே..  உனக்காக நாளைக்கி ஒரு  doggy  வருது..  அப்போ 7 ஆகிடுவோம்..  ஆனா, doggy என் பூனைக்குட்டிய கடிச்சி கொன்னுடுமே...  மறுபடியும்  6 பேர் ஆகிடுவோம்.  பாட்டி : இல்லப்பா..  உனக்கு கல்யாணம் ஆகும்ல..  அப்ப7 பேர் ஆகிடுவோம்.  பேரன் : அப்படினா அக்காவுக்கும் கல்யாணமாகி போயிடுமே..  அப்ப 6 பேர் தான இருப்போம்.  பாட்டி : ஓஹ்..  செல்ல ராசா...  உனக்கு பிள்ளை பிறக்குமே..  அப்ப  7 பேர் ஆகிடுவோம்ல.  ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க செத்து போயிடுவீங்களே..  மறுபடியும் 6 பேர் தான் இருப்போமா..?  பாட்டி : அடி  செருப்பால ..  போய் TV யே பாத்து தொலை da.. 

Who Are You?

சிங்கங்களிடம் பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் சிங்கங்கள்  என்றன ..! நாய்களிடம் பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் நாய்கள்  என்றன ..! கழுதைகளிடம் பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் கழுதைகள் என்றன ..! பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன் பிறப்பால் நீங்கள்  யார் என்று  ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் பன்றிகள் என்றன ..! மனிதர்களிடம் பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? ஒருவன் பிறப்பால் நான் இஸ்லாம் என்றான். ..! மறொருவன் தான் பிறப்பால் கிறிஸ்தவன் என்றான்..! இன்னொருவன் பிறப்பால் தான் இந்து என்றான்..! அனைவருக்கும் தெரியவில்லை நாம் அனைவரும் மனிதர்  என்று...? பிறப்பால் நாம் மனிதர் என்பதையும் மறந்து...! வாழும் வாழ்க்கையில் மனித நேயத்தையும் மறந்து.! மத நேயத்தோடும் சாதி வெறியோடும் வாழும் மானம் கெட்ட மனித இனம் மிருகத்துடன் ஒப்பிடக் கூட தகுதி  இல்லாதவர்கள்...! இனி பிறக்கும் உயிர்களுக்காவது நாம் மனிதர் என்பதையும் மனித...