அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதுவே தமிழின் சிறப்பு அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை...
Best Tamil Stories, oru pakka kathaikal, one page stories, funny stories, emotional stories, motivational stories all available at one place...